பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை

மாரண்டஅள்ளி அருகே சி.எம். புதூரில் பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-10-09 18:45 GMT

மாரண்டஅள்ளி:

மாரண்ட‌அள்ளி அருகே உள்ள சி.எம்.புதூரில் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையொட்டி மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்