சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

தசரா பண்டிகையையொட்டி சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update: 2022-10-05 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி மற்றும் ஓட்டர் பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து தசரா பண்டிகையை ஒட்டி 9 சாமிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. துளேபிடா என்ற இடத்தில் சாமி சிலைகளும் ஓரிடத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்கள் தலைமேல் தேங்காய்களை உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தலைமேல் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்