சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்
வத்தலக்குண்டுவில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
வத்தலக்குண்டுவில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி தலைமை தாங்கி பேசினார். திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், வத்தலக்குண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன், நகர செயலாளர் சின்னத்துரை, பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி வரவேற்றார்.
முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு துறை செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினர். பின்னர் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 1,000 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உதயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட்ரமணன், சேவுகம்பட்டி பேரூர் செயலாளர் தங்கராஜ், பட்டிவீரன்பட்டி பேரூர் செயலாளர் அருண்குமார், தி.மு.க. நிர்வாகிகள் மணிமுருகன், அன்பு, ரமேஷ், சிவக்குமார் மகாமுனி, அமுதவேல், முத்துப்பாண்டி, கோபால், கார்த்திக், அந்தோணிசாமி, செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் அங்குச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.