தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்ட அறிமுக விழா
தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்ட அறிமுக விழா நடைபெற்றது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்ட அறிமுக விழா நடைபெற்றது. விழாவை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தாட்கோ திட்டங்களில் 2021-22 -ம் ஆண்டிற்கு நமக்கு வழங்கிய இலக்கு ரூ.1 கோடியே 55 லட்சம். ஆனால் அந்த ஆண்டு இலக்கை மீறி ரூ.3 கோடியே 18 லட்சம் அளவிற்கு மானியம் பெற்று இருக்கிறோம். 2022-23-ம் ஆண்டிற்கு ரூ.3 கோடியே 8 லட்சம் அளவிற்கு மானியம் பெற்று இருக்கிறோம். ஆதிதிராவிட நலம் சார்ந்த திட்டங்கள் பசு மாடு, கோழி வளர்த்தல் அதிகபட்சமாக கனரக வாகனம் வாங்கும் திட்டங்கள் உள்ளன, என்றார்.