சிலுவைப்பாதை சிறப்பு பிரார்த்தனை

நெல்லையில் புனித வெள்ளியையொட்டி சிலுவைப்பாதை சிறப்பு பிரார்த்தனை நேற்று நடந்தது.

Update: 2023-04-07 19:09 GMT

நெல்லையில் புனித வெள்ளியையொட்டி சிலுவைப்பாதை சிறப்பு பிரார்த்தனை நேற்று நடந்தது. நாளை ஈஸ்டர் பண்டிகை நடக்கிறது.

சிலுவைப்பாதை

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் தியாகம் செய்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள். இதையொட்டி கிறிஸ்தவ மக்கள் சாம்பல் புதனுடன் 40 நாட்கள் தவக்காலம் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி பிரார்த்தனை நடைபெற்றது.

வழிபாடு ஊர்வலம்

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அங்குள்ள மாநகராட்சி தண்ணீர் தொட்டி அருகில் இருந்து இந்த பிரார்த்தனை வழிபாடு ஊர்வலமாக தொடங்கியது. 14 நிலைகளில் இயேசுவின் நிலைப்பாட்டை உணர்த்தும் வகையில் நின்று பிரார்த்தனை செய்து கொண்டே பேராலயத்துக்கு வந்தனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புனித வெள்ளியையொட்டி பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ. ஊசிகோபுரம் பேராலயத்தில் மும்மணி தியான ஆராதனையின் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் புனித வெள்ளி ஆராதனை நடந்தது.

சிறப்பு பிரார்த்தனை

இதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) இரவு கத்தோலிக்க ஆலயங்களில் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையிலான சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

இதே போல் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு ஈஸ்டர் சிறப்பு ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் நடைபெறுகிறது. நாளை கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்