மழை வேண்டி சிறப்பு தொழுகை

கடையநல்லூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது.

Update: 2023-09-03 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் பருவமழை பொய்த்ததால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் கார் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 10 நாட்களாக மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிப்பதால் குடிநீர் தட்டுப்பாடு எழும் அபாயமும் உள்ளது.

இந்தநிலையில் கடையநல்லூர் பேட்டை பெரிய குத்பா பள்ளிவாசல் வளாகத்தில் மழை வேண்டி நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளிவாசல் இமாம் அஹ்மத் தொழுகையை நடத்தினார். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரகுமானியாபுரம் 3 மற்றும் 10-வது தெருவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இமாம் கபூர் மிஸ்பாகி தொழுகை நடத்தினார். இதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்