தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை
வேட்டவலத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
வேட்டவலம்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த 3-ஆவது நாள் ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
அதன்படி வேட்டவலம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்குத்தந்தை வேளாங்கண்ணி தலைமையில் ஈஸ்டர் சிறப்புப பிரார்த்தனை, கூட்டு திருப்பலி, ஆராதனை ஆகியவை நடந்தது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதே போல வேட்டவலம் மறை வட்டத்திற்கு உட்பட்ட ஆவூர், ஜமீன் கூடலூர், நா.கெங்கப்பட்டு, சாணிப்பூண்டி, மதுராம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில். சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.