பக்ரீத் பண்டிகை சிறப்பு ெதாழுகை

பக்ரீத் பண்டிகை சிறப்பு ெதாழுகை

Update: 2022-07-10 16:29 GMT

அனுப்பர்பாளையம்

திருப்பூரில் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

பக்ரீத் பண்டிகை

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூரில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இதேபோல் ராயபுரம் பகுதியில் உள்ள ஈத்கா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற தொழுகையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, உலக அமைதிக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மேலும் பெரிய தோட்டம், எஸ்.ஏ.பி. சந்திப்பு, சாமுண்டிபுரம் உள்பட அனைத்து பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிவில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்து கூறி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

வாழ்த்து

பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம் பெருமக்கள் புத்தாடை அணிந்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கினார்கள்.

மாலையில் இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் கடை வீதிகள் மற்றும் பூங்காவுக்கு சென்று பக்ரீத் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள்.

சேவூர்

பக்ரீத் பண்டிகையையொட்டி சேவூர் தக்னி சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் புத்தாடையணிந்து ஒருவருக்கொருவர் தங்களது பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் காலை 9 மணிக்கு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் சேவூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இதேபோல கானூரில் மிகப்பெரிய தர்காவான கானூர் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் சிறப்புத்தொழுகைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்