சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பகவானுக்கு சிறப்பு பூஜை

குடவாசல் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பகவானுக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2022-10-16 18:45 GMT

குடவாசல் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பகவானுக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு-கேது சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு-கேது தோஷ பரிகார பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்