கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை

கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-09-05 21:15 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் சக்திமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத கிருத்திகையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 11 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. இதில் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். கிருத்திகையில் விரதம் இருந்த பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்ட பின்னர் விரதத்தை நிறைவு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்