சங்கடஹர சதுர்த்தியையொட்டிவிநாயகருக்கு சிறப்பு பூைஜகள்
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு பூைஜகள்
வெள்ளகோவில்
சங்கடஹர சதுர்த்தியையன்று விரதம் இருந்து விநாயகப்பெருமானை வேண்டினால் சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், எல்.கே.சி.நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவில், திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமாரவலசு விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.