கோவிலில் சிறப்பு பூஜை
எட்டயபுரம் அருகே நம்பிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள நம்பிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ராமநவமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு, பால், தயிர், சந்தனம், நெய் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.