வெள்ளகோவில்
வெள்ளகோவில் பகுதியில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வீரக்குமாரசாமிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. வெள்ளகோவில் செல்லாண்டியம்மன் கோவில், சோழீஸ்வரர் கோவில், எல்.கே.சி நகர், புற்றுக்கண் ஆனந்தவிநாயகர் கோவில், தர்ம சாஸ்தா அய்யப்பசாமி கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
------------