அய்யனார் கோவில்களில் சிறப்பு பூஜை
அய்யனார் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆலங்குளம்,
ஆடி அமாவாசையை முன்னிட்டு, கோவிலூர் செந்தட்டி அய்யனார் கோவில், கண்மாய்பட்டி தலக்குடையார் அய்யனார் கோவில், வங்கார்பட்டி கரையடி கருப்பசாமி கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால்,தயிர்,நெய், தேன், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல எண்ணற்ற பேர் தங்களது குல தெய்வமான அய்யனாரை வழிபட்டு சென்றனர்.