அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி வெள்ளியை முன்னிட்டு காங்கயம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

Update: 2023-08-04 11:38 GMT

காங்கயம்,

ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காங்கயம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடுகள் செய்தனர்.

ஆடி வெள்ளி

ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்த கிழமை என்பதால் அன்றைய தினங்களில் அதிகாலை முதல் அம்மன் கோவில்களில் வழிபாடுகள் செய்வது விஷேசமான ஒன்றாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமை என்பதால் காங்கயம் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

காங்கயம் பஸ் நிலையம் அருகில் துர்க்கையம்மன் கோவில், மெயின் ரோடு பேட்டை மாரியம்மன் கோவில், மடவிளாகம் அங்காளம்மன் கோவில், காடையூர் கரியகாளியம்மன் கோவில், காங்கயம் நகர் சவுண்டம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் நேற்று அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பழ வகை அலங்காரம்

பஸ் நிலையம் அருகே உள்ள துர்க்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆப்பிள், ஆரஞ்சு, மா, வாழைப்பழம், பேரிக்காய், கொய்யாப்பழம் உள்ளிட்ட பழ வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதிகாலை முதலே பெண்கள் திரளாக கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபாடுகள் நடத்தினர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் குடும்பத்துடன் கலந்துகொண்டு வழிபட்டனர்.

-

Tags:    

மேலும் செய்திகள்