வெங்கடேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2023-09-02 18:45 GMT

சூளகிரி

சூளகிரி அருகே கோபசந்திரத்தில் பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சாமி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை முதலே மூலவருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பெருமாளுக்கும், ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கும் மலர்அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்