வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

வளர்பிறை ஏகாதசியையொட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2023-07-28 21:30 GMT

பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வளர் பிறை ஏகாதசியையொட்டி நேற்ற காலை 10.30 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு திவ்ய திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி பால், இளநீர், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடாந்து 11 மணிக்கு விஷ்ணு சகஸ்ர நாம பாராயனம் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


மேலும் செய்திகள்