அழகிய கூத்தர் கோவிலில் சிறப்பு பூஜை
அழகிய கூத்தர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி வள்ளி-தெய்வானை, சுப்பிரமணியருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் தலைமையில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.