சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

அமாவாசையை முன்னிட்டு சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2022-06-29 17:02 GMT

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த சிறுவந்தாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் ஆனந்தாயி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் சிறுவந்தாடு மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்