சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-07-27 19:30 GMT

திண்டுக்கல் பாரதிபுரத்தில் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்றும் சாய் பாபா கோவில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. அப்போது சாய் பாபாவுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்டவையால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்களும் சாய் பாபாவின் சிலைக்கு விபூதியால் அபிஷேகம் செய்தனர்.

பின்னர் நடந்த பஜனை நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று பக்தி பாடல்களை பாடினர். அதைதொடர்ந்து பக்தர்களுக்கு காலை, மாலை நேரத்தில் இட்லி, சப்பாத்தி பிரசாதமும், மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று சாய் பாபாவை தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்