செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
சாகுபுரம் செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே சாகுபுரத்தில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில் ஆவணி முதல் தேதியில் நவ சண்டியாகம் நடைபெற்றது.
முன்னதாக விநாயகருக்கு 16 வகையான வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் சாகுபுரம் பி.சி.டபிள்யூ தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், நந்தினி சீனிவாசன் மற்றும் தொழிற்சாலை அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.