கட்டாரிமங்கலம் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை
சிவராத்திரியையொட்டி கட்டாரிமங்கலம் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
தட்டார்மடம்:
பேய்குளம் அருகே கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் சிவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி, சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அழகிய கூத்தர் அருட்பணி மன்றத்தின் சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. தொடர்ந்து முதல், 2-ம், 3-ம், 4-ம் கால பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.