கரபுரநாதர் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2023-03-19 19:30 GMT

கொண்டலாம்பட்டி:-

சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பெரியநாயகி சமேத கரபுரநாதருக்கு நெய், பால், தயிர், தேன் மற்றும் 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி நந்தி வாகனத்தில் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்