இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற வேண்டி முன்னாள் அமைச்சர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.

Update: 2023-08-15 19:42 GMT

சிவகாசி, 

மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற வேண்டி முன்னாள் அமைச்சர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.

மதுரை மாநாடு

அ.தி.மு.க. பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பின்னர் மாநில அளவிலான முதல் மாநாடு வருகிற 20-ந் தேதி மதுரையில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என 25 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் 90 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

சிறப்பு பூஜை

மதுரை மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வளர்மதி ஆகியோர் நேற்று மதியம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.

இந்த பூஜையில் அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் விஜயஆனந்த், சாத்தூர் நகர செயலாளர் இளங்கோ, ஒன்றிய செயலாளர் தேவதுரை, மாவட்ட கவுன்சிலர் இந்திராகண்ணன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வெங்கடேசன், பகுதி செயலாளர்கள் சரவணன், கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி எம்.ஜி.ஆர். இளைஞரணி நகர செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்