ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

சங்கராபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-31 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள முதல்பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்திகள் உள்புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவிலிலும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்