சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உம்பளச்சேரியில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.