அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம்

அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

Update: 2023-05-11 18:22 GMT

அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடந்தது. முகாமில் போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து 39 மனுக்களை பெற்றனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முகாமில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் (மதுவிலக்கு அமல் பிரிவு), போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வெங்கடேசன், சங்கர் கணேஷ் (அரியலூர் உட்கோட்டம்), ராஜ சோமசுந்தரம் (ஜெயங்கொண்டம் உட்கோட்டம்), சுரேஷ் குமார் (மாவட்ட குற்றப்பிரிவு) ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்