சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்டம்

இரண்டாயிரவிளாகத்தில் சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்டம் நடந்தது.

Update: 2023-08-01 18:45 GMT

கடலூர்:

கடலூர் தாலுகா இரண்டாயிரவிளாகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையமும், கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும் இணைந்து சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்டம் நடத்தப்பட்டது. இதற்கு சென்னை நடேசன் கூட்டுறவு மேலாள்மை நிலையத்தின் இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், 18 வயது நிரம்பியர்கள் உறுப்பினராகலாம். கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 நிமிடத்தில் குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. வட்டியில்லா பயிர்க்கடன், கறவைமாடு கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளி கடன், குறைந்த வட்டியில் மகளிர் சுயஉதவிக்குழு கடன், ஆதரவற்ற விதவைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் வழங்கப்படுகிறது என்றார். முன்னதாக சங்கத்தின் செயலாட்சியர் வேல்முருகன் வரவேற்றார். கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் தேவி, சங்க செயலாளர் ஜெயச்சந்திரன், நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் விரிவுரையாளர் நாகராஜன், மேலாளர் முருகையன் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசார அலுவலர் சித்திவிளாகம் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்