பள்ளி செல்லா குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை
வாணியம்பாடியில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
வாணியம்பாடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையங்களில் 14 வயது முதல் 17 வயது வரை உள்ள பள்ளி செல்லா இளம் வயதினருக்கான ஹீமோகுளோபின் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை நோய் பற்றியும், அதனை தடுக்க, தினசரி உணவில் போதுமான இரும்பு சத்து வைட்டமின்கள் எவ்வாறு பெறுவது என்பது பற்றி விளக்கினார். மருத்துவர்கள் திருப்பதி, தேன்மொழி, விக்னேஷ் மற்றும் ஆலங்காயம் வட்டார சுகாதார பணியாளர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.