மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி;

Update: 2023-05-07 19:54 GMT

மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமு (வயது70). நேற்றுமுன்தினம் இவர் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது சொக்கனாவூரை சேர்ந்த ராஜா(44), லட்சுமி(2்7) ஆகியோர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ராமு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமு, ராஜா, லட்சுமி ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமு இறந்தார். ராஜா, லட்சுமி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்