தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
திமிரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திமிரி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) சரவணன் தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் கிரிஜா தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு காய்ச்சல், சளி, மூக்கடைப்பு, கை, கால் மூட்டு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை மற்றும் இலவசமாக மருந்துகள் வழங்கினர்.
இதில் இளநிலை உதவியாளர் நவீன்குமார், பேரூராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் முத்துசாமி, தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.