தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
சாயல்குடி,
சாயல்குடியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி துறை இணைந்து நடத்தும் கமுதி, அபிராமம், முதுகுளத்தூர், மற்றும் சாயல்குடி பேரூராட்சிகளின் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் வார்டு உறுப்பினர்கள் மாணிக்கவேல், அழகர்வேல் பாண்டியன், கோவிந்தன், குமரையா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.