அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-06-16 18:23 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் பார்வையிட்டு பரிசோதனை செய்து கொண்டார்.

முகாமில் பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் பரிசோதனை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் அறிந்து அதற்கேற்ற சிகிச்சை, ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. .

முகாமில் 250-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் பணியாற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்