மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். முகாமில் பல்வேறு குறைபாடுகள் உள்ள 57 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சிறப்பு சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட்டது. மேலும், மாற்று த்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீடு, தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்குதல் குறித்தும் உதவிகள் செய்யப்பட்டது.