சிதம்பரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் - காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

மக்களிடையே பரவி வருவது சாதாரண காய்ச்சல் தான் என்றும், பயம் கொள்ளத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-09-21 12:07 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்மைக் காலமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில், பொதுமக்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

கிராமங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு நில வேம்பு கசாயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஏற்ப மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மக்களிடையே பரவி வருவது சாதாரண காய்ச்சல் தான் என்றும், இதற்காக பயம் கொள்ளத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்