உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, தென்காசி ப்ரோ விஷன் கண் மருத்துவமனையில் நீரிழிவு நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நீரிழிவு நோயால் கண்களில் ரெட்டினா என்னும் விழித்திரையில் ஏற்படும் பாதிப்பு, விழித்திரை பிரிதல், விழித்திரை ரத்தநாள அடைப்பு போன்ற நோய்களுக்கு பரிசோதனைகள், ஸ்கேன் ஆகியவை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது. முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை ப்ரோ விஷன் கண் மருத்துவமனை குழுவினர் ெசய்து இருந்தனர்.
நீரிழிவு நோயால் கண் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சைகளான விழித்திரை அறுவை சிகிச்சை, ரத்த கசிவுக்கான லேசர் சிகிச்சை, விழித்திரையில் செலுத்தப்படும் ஊசி போன்ற உயர்தர சிகிச்சை வசதிகளும் உள்ளன என்று ப்ரோ விஷன் கண் மருத்துவமனையின் கண்புரை மற்றும் விழித்திரை சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜகுமாரி தெரிவித்தார். மேலும் கண்சார்ந்த ஆலோசனைகளுக்கும், சந்தேகங்களுக்கும் 04633-212923, 221923, 9487323130 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.