சிறப்பு மருத்துவ முகாம்

சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-10-14 19:07 GMT

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நெய்தலூர் காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் விமலா வேலாயுதம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தோகைமலை வட்டார மருத்துவ அலுவலர் தியாகராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு, காய்ச்சல் பரிசோதனை, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், கண், காது, மூக்கு, தொண்டை, சித்த மருத்துவம் உள்பட பல நோய்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். இம்முகாமில் நெய்தலூர் காலனி பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்