சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம் -தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது;

Update: 2022-08-14 05:12 GMT

சென்னை,

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு சிறந்த பொதுச்சேவைக்கான முதல் அமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.விருதுகள் பெறுவோர்களுக்கு 8 கிராம் தங்கப்பதக்கமும்,ரூ .25,000 பரிசும் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்