சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி
சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் கொண்டு சிலுவை பூசப்பட்டது.
காரைக்குடி
சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் கொண்டு சிலுவை பூசப்பட்டது.
தவக்காலம்
கிறிஸ்தவர்கள் தவக்காலமாக சாம்பல் புதன்கிழமை முதல் இயேசு உயிர்ப்பு வரை 40 நாட்கள் நோன்பு இருந்து கடைப்பிடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் பின்னர் குருத்து ஞாயிற்றுகிழமையாக கடைப்பிடிக்கப்பட்டு கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் குருத்து ஓலையை வைத்திருந்து அதன் பின்னர் அந்த ஓலையை சாம்பல் புதன் கிழமைக்கு முந்தைய நாள் ஆலயத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
பின்னர் அந்த ஓலைகள் எரிக்கப்பட்டு அதை சாம்பாலாக்கி சாம்பல் புதன்கிழமை அன்று கிறிஸ்தவ பங்கு தந்தையர்கள் மூலம் அர்ச்சித்து திருப்பலி நிறைவேற்றப்பட்டு அதன் பின்னர் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சிலுவையாக பூசப்படுவது வழக்கம். மேலும் இந்த தவநாட்கள் தினத்தில் கிறிஸ்தவர்கள் எவ்வித சுபகாரியங்களும் நடத்தமாட்டார்கள். இதுதவிர பல கிறிஸ்தவர்கள் காவி உடை அணிந்து விரதமிருந்து பாதயாத்திரையாக முக்கியமான கிறிஸ்தவ ஆலயங்களுக்கு செல்வது வழக்கம்.
சாம்பல் புதனை முன்னிட்டு
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சாம்பல் புதன்கிழமை நேற்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டது. காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின்ராயன் தலைமையில் திருப்பலி நடைபெற்று அதில கலந்துகொண்டவர்களுக்கு சாம்பல் கொண்டு நெற்றியில் சிலுவையாக பூசப்பட்டது.
இதேபோல் காரைக்குடி செஞ்சை குழந்தை தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ தலைமையிலும், அரியக்குடி வளன்நகர் குழந்தை இயேசு ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப்சகாயராஜ் தலைமையிலும், ஆவுடைபொய்கை அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையிலும், மானகிரி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை ஜூடுஅந்தோணிராஜ் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்று கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சாம்பல் கொண்டு சிலுவையாக பூசப்பட்டது.