மின்பாதைகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்பாதைகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Update: 2023-07-20 16:14 GMT

தேனி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின்தடை மற்றும் மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மின்பகிர்மான வட்டத்தில் உயர் அழுத்தம் மற்றும் தாழ்வு அழுத்த மின்பாதைகளில் ஒட்டுமொத்த சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக நேற்று முன்தினம் பராமரிப்பு பணிகள் நடந்தன. அதில், 87 இடங்களில் பழுதடைந்த மின்கம்பிகள் சரி செய்யப்பட்டன. 57 இடங்களில் தாழ்வான மின்கடத்திகளை சீர்செய்தல், 30 இடங்களில் மின்கம்பங்கள் இடைசெறுகல் பணி, 56 இடங்களில் பழுதான இன்சுலேட்டர்களை (மின் கடத்தாத பொருள்) மாற்றுதல், 49 இடங்களில் சேதமடைந்த ஜாம்பர்களை மாற்றுதல், 707 இடங்களில் மரக்கிளைகளை வெட்டுதல், 27 சாய்ந்த மின்கம்பங்களை சீர்செய்தல், 25 இடங்களில் மின்மாற்றி கட்டமைப்பு பராமரிப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2-வது கட்டமாக வருகிற 26-ந்தேதி சிறப்பு பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்