கலவை தாலுகாவில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்

கலவை தாலுகாவில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-09-23 18:45 GMT

கலவை

கலவை தாலுகாவில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

கலவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் கலவை தாசில்தார் சமீம் தலைமையில் நடைபெற்றது. இதில் அந்த சமூகங்களை சேர்ந்த தேரங்வு செய்யப்பட்ட சிறு வியாபாரிகள், பங்க் கடை, பூக்கடை, டீக்கடைக்காரர்கள், விவசாயிகள், மரபணு தொழில் செய்பவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கடன் பெற்றனர்.

கலவை பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கி செயலாளர்களும் கலந்து கொண்டு கடன் வழங்கும் திட்டத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். ஏற்பாடுகளை கலவை துணை தாசில்தார் இளையராஜா, வருவாய் ஆய்வாளர்கள் வீரராகவன், தணிகாசலம் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்