வழக்கறிஞர்களுக்கு சட்டம் சார்ந்த சிறப்பு சொற்பொழிவு

வழக்கறிஞர்களுக்கு சட்டம் சார்ந்த சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

Update: 2023-08-26 19:33 GMT

திருச்சியில் வழக்கறிஞர்களுக்கு சட்டம் சார்ந்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஜெயந்திராணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்லம் தமிழரசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ஜெயந்திராணி பேசும்போது, ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை சட்டம், சமூகம், மருத்துவம், யோகா,பொது அறிவு, நீதிபதி தேர்வு பயிற்சி வகுப்பு என பல்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த வல்லுனர்கள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், ஆடிட்டர்கள், மருத்துவர்கள் ஆகியோரைக் கொண்டு அமர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார். இதில் மூத்த வழக்கறிஞர் இமயவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வழக்கறிஞர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்