சிறப்பு மனுநீதி நாள் முகாம்
ஆம்பூர் அருகே சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்துகொண்டு 210 பயனாளிகளுக்கு ரூ.75 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் வில்வநாதன் எம்.எல்.ஏ., மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், துணைத்தலைவர் சாந்தி சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் பலர் கலந்துெகாண்டனர்.