சிறப்பு மனுநீதி நாள் முகாம்
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்
வாணியம்பாடி
வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம், எக்லாஸ்புரம், வடக்குப்பட்டு கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை வகித்தார்.
வருவாய்கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சூரியகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், ஒன்றியக்குழுத் தலைவர் வெண்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சம்பத் வரவேற்றார்.
முகாமில் 81 பயணாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கி பேசினார்.