கோடீஸ்வரர் கோவிலில் சிறப்பு ஹோமம்
கோடீஸ்வரர் கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது.;
கரூர் ஐந்து ரோட்டில் அமைந்துள்ள பாலாம்பிகை சமேத கோடீஸ்வரர் கோவிலில் 5-ம் ஆண்டு ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோடீஸ்வரர் கோவிலில் ருத்ரபாராயணம், ருத்ர ஹோமம், ருத்ர அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து கோடீஸ்வரர் சுவாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.