மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-11 18:45 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. நிறைமதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இலவச வீடு, வீட்டு மனைபட்டா, மோட்டார் பொருத்திய 3 சக்கர வாகனம், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகிய கோரிக்கைகள் அடங்கிய 25 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்