முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
கரூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகின்ற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அன்று கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்தோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக மாவட்ட கலெக்டரிடம் நேரில் இரட்டை பிரதிகளில் அளித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.