விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டு பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலுவையிலிருந்த 22 மனுக்கள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. மேலும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட 6 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.