சிறப்பு கிராம சபை கூட்டம்
வாய்மேடு, பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சிகளில்சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.;
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இந்திரா வீராசாமி முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரியாசிவசங்கர், ராமநாதன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான பொதுப்பணிகள் தேர்வு, கிராம வளர்ச்சி திட்டம், நோயற்ற ஊராட்சி, வாழ்வாதாரம் நிறைந்த வறுமையற்ற ஊராட்சி, உள்ளிட்ட திட்டம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதே போல வாய்மேட்டில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார். தகட்டூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். . முடிவில் ஊராட்சி செயலாளர் அன்புராஜ் நன்றி கூறினார்.தாணிக்கோட்டகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.