வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ரகுபதி வரவேற்று பேசினார். கூட்டத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் 2023-24 மிசின் அந்தியோதய கணக்கெடுப்பு மூலம் கிராம ஊராட்சி வளர்ச்சிக்கான தேவை விவரம் கண்டறியப்பட்ட கணக்கின் அறிக்கையை அங்கீகரித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மகளிர் சுய உதவி குழுவினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோம்புபாளையம், திருக்காடுதுறை, என்.புகழூர் ஆகிய ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைகூட்டம் அந்தந்த ஊராட்சித்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது